Saturday 7 October 2017

புண்பட்டுவிடுகிறது மனது

புண்பட்டுவிடுகிறது மனது

சாதியாலும் மதத்தாலும்
கொடுமைகள் நிகழும்போதெல்லாம்
அமைதியாக வேடிக்கைபார்க்கும் மனது
சாதி மதம் வெண்டாமென
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது

தேரோடு சேர்ந்து
சாமியும் எரிந்து சாம்பலானபோது
போர்வை போர்த்தி தூங்கிய மனது
கடவுள் இல்லையென
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது

மூடப்பழக்கத்தால்
உயிரையும் உடைமையையும்
இழந்தபோதெல்லாம்
பல்லிளித்துக்கொண்டிருந்த மனது
அதற்கு எதிராக
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது

தீண்டாமைக்கொடுமை
நிகழும்போதெல்லாம்
நமக்கென்ன வந்தது என
கவலையற்று திரியும் மனது
அதைப்பற்றி ஏதாவது
யாரேனும் சொல்லிவிட்டால்
சட்டென்று புண்பட்டுவிடுகிறது

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...