Saturday 7 October 2017

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை
விடுமுறையென இல்லாதிருந்தால்
மனநோயாளிகள் எண்ணிக்கை
அதிகரித்திருக்கும்

ஆடு,கோழி,மீன்
காடை,கௌதாரி என
ஏதாவது ஒன்றுடன்தான் முடிகிறது
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்

திங்கட்கிழமையைப் பற்றிய கவலை
தொடங்கி விடுகிறது
ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்தே

எல்லோருடனும் சேர்ந்திருக்கலாம்
என்பதாலேயே
பிடித்திருக்கிறது
ஞாயிற்றுக்கிழமைகளை

திங்கட்கிழமை விடிந்ததுமே
எப்போது வரும்
ஞாயிற்றுக்கிழமையென
ஏங்கித் தவிக்கிறது மனசு

ஞாயிற்றுக்கிழமைகளின்
சந்தோசங்களுக்காகவே
மீதி ஆறு நாட்களும்
படுத்தும்பாட்டை
பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...