Saturday 7 October 2017

மழை

பெய்யெனப் பெய்யாது மழை

பெய்தாலும் திட்டித்தீர்க்கிறோம்
இல்லையென்றாலும் திட்டித்தீர்க்கிறோம்

பெய்யெனப் பெய்யாது
பெய்யும்போதுதான் பெய்யும்

வேண்டும் நேரத்தில் வேண்டுமிடத்தில்
வேண்டுமளவில் பொழிவதற்கு
அது ஒன்றும் வீட்டுக் குழாய்நீரல்ல
இயற்கை அள்ளி இறைக்கும் பெருநீர்

மழை நீரை சேகரிக்க
குளம் கண்மாய் வெட்டிவைத்த
மூதாதையர்கள் முட்டாள்கள்
நாமெல்லாம் புத்திசாலிகள்

சாலையெங்கும்
பெருக்கெடுத்து ஓடும்நீர்
கலந்துவிடுகிறது தெருவோர சாக்கடையோடு
கைகட்டி வேடிக்கை பார்ப்போம்
எப்படியும் மழைக்காலம் முடிந்து
கோடை வந்துவிடும்
எல்லோரும் கையேந்தி பிச்சை கேட்போம்
அண்டை மாநிலத்திடம் தண்ணீருக்காக

வீட்டைச்சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீர்
ஓடிச்செல்ல வழி இல்லாமல்
வீட்டிற்குள் பாய்கிறது

உயிரையும் உடைமையையும் இழந்து
கலங்கி நிற்கும் உறவுகளைப் பார்க்கும்போது
கண்ணீர்தான் வருகிறது என்ன செய்ய

தன்மீது ஒன்றும் தவறே இல்லை
மனிதர்கள் மீதுதான் தவறு என
மறுபடியும் சொல்லிவிட்டது இயற்கை

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...