Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

சாலை விதிகளை
மதிப்பதே இல்லை
நெடுஞ்சாலைகளில்
திரியும் மாடுகள்

என்றோ திருடிய வடைக்காக
காலம் காலமாக
அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
காக்கைகள்

வீடுகளில் வளர்க்கப்படும்
விலை உயர்ந்த நாய்கள்
அப்பாவிகளை
பயமுறுத்துகின்றன
திருடர்களைக் கண்டால் மட்டும்
வாலாட்டுகின்றன

திருடர்களிடமிருந்து
காப்பாற்றும் என 
ஆசையாய் வளர்த்த நாய்
திருடுபோய் விட்டது.

எதிர்காலம் சொல்லுகின்ற
எல்லாக் கிளிகளுக்கும்
தம் எதிர்காலம் என்னவென்று
தெரியாமலேயே போய்விடுகிறது

கேட்கிறார்களோ இல்லையோ
விடிந்து விட்டதை
உரக்கச் சொல்லிக்கொண்டிருக்கின்றன
சேவல்கள்

சாமி சிலைகளை சுமந்து செல்லும்
யானைகளுக்குத் தெரிவதில்லை,
அடுத்த நாள்
தும்பிக்கையை நீட்டி பிச்சை 
கேட்க வேண்டும் என்பது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...