Saturday 7 October 2017

ஞாபகம் வருதே

கல்லூரியில் படிக்கும்போது
நண்பர்களுடன் சேர்ந்து
திரைப்படம் பார்த்ததும்
தினந்தோறும் கல்லூரிக்கு
பேருந்திலேறி பயணம் செய்ததும்

இன்னும் அப்படியேதான் இருக்கிறது

பள்ளிகூட வாசலில்
உணவு இடைவேளையில்
ஐஸ்க்ரீம் வாங்கி தின்றதும்
பள்ளிவிட்டு செல்லும்போது
மிட்டாய்க்கடை ஆயாவிடம்
தேன்மிட்டாய் வாங்கியதும்

இன்னும் அப்படியேதான் இருக்கிறது

பத்தாவது வார்டு பள்ளியில்
பாடம் படித்ததும்
மஞ்சுவிரட்டு பொட்டலிலும்
பிள்ளையார் கோவில் பொட்டலிலும்
கிரிக்கெட் விளையாடியதும்

இன்னும் அப்படியேதான் இருக்கிறது

பிள்ளையார் கோவிலின் 
முன்வைத்த திண்ணையில்
வேடிக்கையாக பொழுதுபோக்கியதும்
பின்பக்கமிருந்து
பின்னாளில் வெட்டுப்பட்ட
அரசமரத்திடம் காற்று வாங்கியதும்
மாந்தோப்புக் கிணற்றின் மேலேயிருந்து
கர்ணம் அடித்து நண்பர்கள் குதிப்பதை
தள்ளி நின்று வேடிக்கை பார்த்ததும்

இன்னும் அப்படியேதான் இருக்கிறது

பிள்ளையார் கோவிலின்
முன்வைத்த திண்ணையில்
வேடிக்கையாக பொழுதுபோக்கியதும்
பின்பக்கமிருந்து
பின்னாளில் வெட்டுப்பட்ட
அரசமரத்திடம் காற்று வாங்கியதும்
மாந்தோப்புக் கிணற்றின் மேலேயிருந்து
கர்ணம் அடித்து நண்பர்கள் குதிப்பதை
தள்ளி நின்று வேடிக்கை பார்த்ததும்

இன்னும் அப்படியேதான் இருக்கிறது

ஊரிலுள்ள கண்மாயில்
கொட்டிக்கிழங்கு பறித்ததும்
குட்டிநண்டுகள் பிடித்ததும்

இன்னும் அப்படியேதான் இருக்கிறது


No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...