Saturday 7 October 2017

கேட்பதற்கு கேள்வி ஒன்று

அரசு ஊழியர்களிடம் கேட்பதற்கு
கேள்வி ஒன்று இருக்கிறது
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும்
குற்றமென எழுதியிருக்கிறீர்களே
அது யாருக்காக

பேருந்து நடத்துனரிடம் கேட்பதற்காக 
வைத்திருக்கிறேன் கேள்வி ஒன்று

வெளிநாடு சென்றுவிட்டு
பெரியபெட்டிகளோடு வருபவர்கள்
பேருந்தில் ஏறும்போது
எதுவுமே சொல்லாத நீங்கள்
மூட்டை முடிச்சுகளோடு ஏறும்
கிராமத்து மனிதர்களை மட்டும்
திட்டுவது ஏன்


அரசுப்பள்ளி ஆசியர்களிடம் கேட்பதற்கு
கேள்வி ஒன்று இருக்கிறது என்னிடம்

ஆறாயிரம் ஊதியம் வாங்கும்
தனியார்பள்ளி ஆசிரியர்கள்
மாணவர்களை
அதிக மதிப்பெண்பெறவைக்கும்போது
முப்பதாயிரம் ஊதியம் வாங்கும்
தங்களால் ஏன் முடிவதில்லை


உடன் அமர்ந்து உணவு உண்ணும்
அலுவலக நண்பரிடம்
கேட்பதற்குப் பயந்து
கேட்காமலேயே வைத்திருக்கிறேன்
கேள்வி ஒன்றை

உண்ணும்போதெல்லாம்
உணவைக் கையில்வைத்து
கண்களை இறுகமூடி
கடவுளுக்கு நன்றிசொல்வதுபோல்

மாலைநேரம் வந்ததும்
மதுஅருந்தும் நீங்கள்
கோப்பையை கையில்ஏந்தி
கண்களை இறுகமூடி
கடவுளுக்குச் சொல்வீரா நன்றி

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...