Monday 9 October 2017

பள்ளி திறந்தது

தொடங்கிவிட்டது
புத்தகங்களுடனான
மாணவர்களின் போராட்டம்.

இன்றிலிருந்து
மறுபடியும்
பொதி சுமக்க வேண்டும்.

பள்ளியிலே 
புது புத்தகமும் நோட்டும் 
தந்தார்கள்
வாங்கியதும்
வாசனையை 
முகர்ந்து பார்த்தேன்.

போன வருஷம் மாதிரியே
இந்த வருசமும்
புது பிரண்ட்ஸ் பிடிக்கணும்.

என்னையும் 
என் பிரண்ட்சுகளையும்
வெவ்வேறு செக்சனுக்கு
மாத்திடாதீங்க ப்ளீஸ்.

எல்லாக் கிளாசுலயும்
பேரையும்
என்னவாகப் போறேங்கிறதையும்
சொல்லச் சொல்லுவாங்க
பேர் மட்டும் என்னவோ அப்படியே இருக்கு
என்னவாகப் போறேங்கிறது மட்டும்
வருசா வருஷம் மாறிக்கிட்டே இருக்கு.

புது கிளாசுக்கு போறது 
சந்தோசமாக இருந்தாலும்
பழைய கிளாஸ் டீச்சரைப் பார்க்கும்போது
அழுகையாக வருகிறது.

இரண்டு மாத
விடுமுறையில் இருந்தாலும்
பள்ளி திறந்த முதல் நாளில் கிடைக்கும்
அரை நாள் விடுமுறைக்காக
காலையிலிருந்தே 
ஏங்கிக் கிடக்கிறது மனசு.

மனசுக்கு கஷ்டமாக
இருக்கிறது
விடுமுறை முடிந்து
முதல் நாள் 
பள்ளிக்குச் செல்லும்
பிள்ளைகளின் 
முகங்களைப் பார்க்கும்போது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...