Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

ஆங்கிலக் கலப்பின்றி
பேச முடியவில்லையே என
வருத்தப்படுகிறேன் நான்
ஆங்கிலத்தில் பேச முடியவில்லையே என
வருத்தப்படுகிறாய் நீ

தமிழில் பிழையுடன் எழுதுகிறாய்
ஏனென்று கேட்டால்
ஆங்கில வழியில் படித்தேன் என்கிறாய்
சரி ஆங்கிலத்திலேயே எழுதென்று சொன்னால்
அதையும் பிழையுடனேயே எழுதுகிறாயே ஏன்

பிள்ளைகளின் பெயர் கேட்கிறாய்
சொன்னதும்
தமிழென்றால் 
மிகவும் பிடிக்குமோவென்று
கிண்டலாகச் சிரிக்கிறாயே ஏன்

குட்மார்னிங் சொல்லும் 
அலுவலகத்தில் 
வணக்கமென்று நான் சொன்னால்
எல்லோரும் சிரிக்கிறார்களே ஏன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...