Saturday 7 October 2017

கவிதைகள்

மூடநம்பிக்கைத் தகவல்களை
நாள்தோறும் சொல்லி வருகிறது
நாள்காட்டி

தலித்தைப் பற்றி எழுதுகிறாயே
நீ என்ன தலித்தா என்கிறாய்
மனிதநேயம் எழுத
மனிதனாய் இருந்தால் மட்டும் போதாதா

என்னோடு வேலை பார்ப்பவர்கள்
எவரின் சாதியும்
எனக்குத் தெரியாதென்றால்
எதற்காக இப்படி
ஆச்சரியமாகப் பார்க்கிறாய்

போகும் பாதையிலுள்ள
எல்லாச் சாமிகளையும் 
கும்பிட்டுச் செல்வது வாடிக்கையாகிவிட்டது
ஒன்றை கும்பிட்டுவிட்டு
மற்றொன்றை கும்பிடாமல் போனால்
கோபித்துக்கொள்ளுமோ என்று
பயமாக வேறு இருக்கிறது

காதைக்கிழிக்கும் விசில் சத்தம்
ஆட்டம் போட வைக்கும் மேளதாளம்
கூடவரும் இளைஞர்களின் குத்தாட்டம்
யாரோ இறந்தவரின்
இறுதிஊர்வலம் என்றெண்ணி 
அருகில் சென்று பார்த்தால்
அடடா என்ன ஆச்சர்யம்
அது கடலில் கரைக்க எடுத்துச்செல்லும்
பிள்ளையாரின் இறுதிஊர்வலம்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...