Saturday 7 October 2017

பொய்

ஏன் நம்ப மறுக்கிறாய்
அவ்வப்போது நானும்
பொய் சொல்வேன் என்பதை

அது எப்படி
எவ்வளவு இயல்பாகப் பேசினாலும்
சட்டென்று கண்டுபிடித்துவிடுகிறாய்
நான் பொய் சொல்கிறேன் என்பதை

பொய்கள்தான்
ரசிக்கும்படியாகவும்
சுவாரசியமானதாகவும்
இருக்கின்றன
உண்மையைவிட

பொய் பேசுவதற்கென்றே
ஆட்களை வைத்திருப்பார்கள் போலிருக்கிறது
கஸ்டமர் கேர்களில்

காலம் முழுவதும்
பொய்களை மட்டுமே பேசி
காலம் தள்ளி வருகிறார்கள்
ஓட்டுப்பொறுக்கிகள்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...