Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

நேரமே சரியில்லை என்கிறான் நண்பன்
ஆமாம்
உனது கைக்கடிகாரம்
பத்துநிமிடம் தாமதமென்கிறேன் நான்

நீதான் சரியான நேரத்திற்கு
எங்குமே செல்வதில்லையே
உனக்கெதற்கு கைக்கடிகாரம் என்கிறாய்
எவ்வளவு நேரம் தாமதமென்பதை
தெரிந்துகொள்ளத்தான் என்கிறேன் நான்

ஓடாவிட்டாலும்
ஒருநாளைக்கு இருமுறை
சரியான நேரத்தை காட்டிவிடுகிறது
கடிகாரம்

யாருமே கவனிக்கவில்லையென்றாலும்
ஓடிக்கொண்டேதானிருக்கிறது
விநாடிமுள்

நல்ல நேரத்தையோ
கெட்ட நேரத்தையோ
ஒருபோதும் காட்டுவதில்லை
எந்த கடிகாரமும்


No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...