Saturday 7 October 2017

தமிழர் திருநாள்

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

உழைப்பின் பெருமை சொல்லும்
உன்னதத் திருநாள்

உழவர்கள் உவகை கொள்ளும்
உற்சாகத் திருநாள்

அனைவரும் கொண்டாடும்
அறுவடைத் திருநாள்

இயற்கையைப் போற்றுகின்ற
இனிய திருநாள்

கால்நடைகளுக்கு நன்றி சொல்லும்
கனிவான திருநாள்

புத்தம்புது பானையிலே
மஞ்சள் கொத்துக்கட்டி
புத்தரிசி புதுவெல்லமிட்டு
பால் பொங்கி வருகையிலே
பொங்கலோ பொங்கலென்று
மனம் மகிழ்ச்சியினால் பொங்கும் நாள்

சமைத்த பொங்கலையும்
வெட்டிவைத்த கரும்பினையும்
உற்றார் உறவினர்க்கும்
அன்பு நண்பர்க்கும் அளித்து
உளம் மகிழும் நன்னாள்

உலகத் தமிழரெல்லாம்
ஒற்றுமையாய் ஒன்றுகூடி
கொண்டாடும் ஒருநாள்
இந்த தமிழர் திருநாள்

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...