Saturday 7 October 2017

கவிதைகள்

நீண்ட நேரம்
வரிசையில் நின்று
எனது முறை வந்ததும்
பதிவதற்காக கார்டை நீட்டினால்
சர்க்கரை தீர்ந்துவிட்டது என்கிறார்கள்
ரேஷன் கடையில்

ஏதோ ஒரு பொய்யைச்சொல்லி
ஆபீசுக்கு லீவு போட்டு
வீட்டில் உட்கார்ந்து
கிரிக்கெட் பார்த்தால்
கடைசியில்
இந்தியா தோற்றுவிடுகிறது

பேருந்துக்காக 
நீண்ட நேரம் காத்திருக்கும்போது
செல்ல வேண்டிய திசைக்கு
எதிர் திசையிலேயே
வரிசையாக சென்று கொண்டிருக்கின்றன
பேருந்துகள்

குடை எடுத்துச் செல்லாமல்
நன்றாக மழையில்
நனைந்துவிட்டோமே என்று
அடுத்த நாள் குடை எடுத்துச் சென்றால்
அன்று மழையே பெய்வதில்லை

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...