Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

கிழிந்த ரூபாயை
யாரிடமிருந்தும் 
வாங்கிவிடக்கூடாதென்பதில்
எச்சரிக்கையாய் இருக்கும் மனது
அதை
யாரிடமாவது தரும்போது மட்டும்
தன்னை அறியாமலேயே 
அது நடப்பதுபோல்
நன்றாக நடித்துவிடுகிறது

பணம் கொடுத்து 
சிறப்பு தரிசனம்
பார்த்தேனென்கிறாய்
உன் சாமிக்குத்தான்
வெட்கமில்லை
உனக்குமா

இமயமலை ஏறிவிட்ட பெண்களால்
இன்னும்
சபரிமலை
ஏறமுடியாமலேயே இருக்கிறது

சுதந்திரமாகப்
பறப்பதாகச் சொல்லும்
எல்லாப் பறவைகளும்
கூண்டுகளையும் 
சுமந்துகொண்டே பறக்கின்றன

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...