Saturday 7 October 2017

கேள்விகள்

கேள்வி கேட்கச் சொன்னார்
ஏன்
எதற்கு
எப்படி என்று,
எங்கள் அய்யா
பகுத்தறிவுப் பகலவன்.

தலை குனிந்து கிடந்த
தமிழ்ச் சமுதாயத்தை
தலை நிமிர வைத்தவை
தந்தைப் பெரியாரின்
கேள்விகள்

உனக்குத் தெரியவில்லையென்றால்
என்னிடம் மட்டுமே கேட்கிறாய்
உன் கேள்விகளுக்கு
விடை தேடித்தர
நான் என்ன googleலா

பிறரை முட்டாளாக்கும்
கேள்விகளையும்
நம்மை அறிவாளியாகக் காட்டிக்கொள்ளும்
கேள்விகளையும்
தூக்கிச் செல்கிறோம்
எங்கு சென்றாலும்


சில கேள்விகள்
துக்கத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை கெடுத்துவிடுகின்றன

நல்லா இருக்கியா என்று
கேட்பது கூட
சம்பிரதாயமாகிவிட்டது
இப்போது

ஏதோ 
கேட்கவேண்டுமென்பதற்காகவே
கேட்கப்படுகின்றன 
கேள்விகள்
பதில்களைப் பற்றிய 
ஆர்வமில்லாமல்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...