Saturday 7 October 2017

துளிப்பாக்கள்

வல்லூறுகள் வலம் வரும்
வான் வெளியில்
வானம்பாடிகளுக்கும்
இடம் இருக்கத்தான் செய்கிறது

திணிக்கப்படும் உணவை
செரிக்க முடியாமல்
திணறுகிறது செவி

நல்லவனாய் இருப்பதை விட
கடினமானதாக இருக்கிறது
நல்லவனாய் நடிப்பது

முக நக நட்பது நட்பன்று
முகநூலில் நட்பது.....?

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...